'லட்சுமி’ குறும்பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்க தயாராகும் நம்பர் நடிகை !

லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன், தமிழ்  திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘ அவர்  இயக்கும் புதிய

லட்சுமி’ குறும்பட இயக்குநர் சர்ஜூன், தமிழ்  திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ‘ அவர்  இயக்கும் புதிய   திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

தமிழில் நம்பர் 1 நடிகையாக நயன்தாரா வலம் வருகிறார். இவர் தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களையே அதிகம் தேர்வு செய்து நடித்துவருகிறார். இவர் நடித்த அறம், டோரா, மாயா போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன.

unknown node

இந்நிலையில் ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும், முற்போக்கான கதைகளத்தையும் கொண்டு குறும்படங்களை இயக்கிய இயக்குநர் சர்ஜூன் இயக்கத்தில் நடிகை நயன்தாரா நடிக்க ஒப்பந்தமாகியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

unknown node

குறும்பட இயக்குநர் சர்ஜூன் ‘லட்சுமி’ மற்றும் ‘மா’ என்னும் இரண்டு குறும்படங்களை இயக்கி பிரபலமானார். மேலும் லட்சுமி குறும்படத்திற்கு சமூக வலைதளங்களில் கடுமையான கண்டனங்களும், பாராட்டுக்களும் ஒருசேர கிடைத்தன. சர்ஜூனின் அடுத்த இயக்கத்தில் உருவான ‘மா’ குறும்படத்தையும் 25 லட்சத்திற்கும் அதிகமானோர் யூடுபில்(YouTube)-ல் பார்த்துள்ளனர்.

unknown node

இந்நிலையில் சர்ஜூன் இயக்க இருக்கும் முதல் திரைப்படத்திலேயே நடிகை நயன்தாரா ஹீரோயினாக ஒப்பந்தமாயிருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் ‘லட்சுமி’ குறும்படம் போல கதாநாயகிக்கு முக்கியத்துவம் இருக்கும் திரைப்படத்தையே சர்ஜூன் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் லட்சுமி குறும்படமே திரைப்படமாக உருவாகலாம் எனவும் அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

'லட்சுமி’ குறும்பட இயக்குநர் இயக்கத்தில் நடிக்க தயாராகும் நம்பர் நடிகை !