ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் ஆவலுடன் காத்துள்ள திரைப்படம் என்னவென்றால், வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள “வாடிவாசல்” திரைப்படம் தான். இந்த படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அந்த அளவிற்கு படத்திற்காக ரசிகர்கள் காத்துள்ளனர்.
unknown nodeஇந்த படத்தை, தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரிக்க, படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான டெஸ்ட் ஷூட் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை கிழக்குக் கடற்கரை சாலையில் ஜல்லிக்கட்டு அரங்கம் ஒன்றை அமைத்து அங்கு சில நாட்கள் நடைபெற்றது.
unknown nodeஈ.சி.ஆர் ரோட்டில் எடுக்கப்பட்ட டெஸ்ட் ஷூட் சிறப்பாக வந்திருப்பதால் அதனை வீடியோவாக சூர்யாவின் பிறந்த நாளான இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, தற்போது அந்த சில நிமிட காட்சி வெளியிடபட்டுள்ளது.
unknown nodeஅதில் சூர்யா மிகவும் கெத்தான லுக்கில் ஜல்லிக்கட்டு மாட்டை பார்த்து பதுங்கி பாய்வது போலவும், மிரட்டலான ஜிவியின் பின்னணி இசையும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இதோ அந்த வீடியோ….
unknown node