நடிகை சன்னி லியோன் தற்போது இயக்குனர் யுவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஓ மை கோஸ்ட்’ எனும் திரைப்படத்தில் நடித்துமுடித்துள்ளார். த்ரில்லர் கதைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிக் பாஸ் பிரபலம் ஜிபி முத்து,தர்ஷா குப்தா, சதிஷ் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
unknown nodeOhMyGhost [Image Source: Twitter ]
இந்த திரைபடத்தின் இசை மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. அதில் ஜிபி முத்து, சன்னிலியோன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டார்கள். இதில் பேசிய ஜிபிமுத்துவின் பேச்சு அனைவரையும் சிரிக்க வைத்துள்ளது.
இதையும் படியுங்களேன்-இந்த விஷயத்தை நீ செஞ்சே ஆகணும்…ஐஸ்வர்யா ராஜேஷுக்கு கண்டிஷன் போட்ட வெற்றிமாறன்.!
unknown nodeOh My Ghost Audio Trailer Launch [Image Source: Twitter ]
இந்த நிகழ்ச்சியில் பேசிய ஜிபி முத்து ” இது என்னுடைய முதல் படம். இதில் நடிக்க வாய்ப்பு கொடுத்ததற்கு யுவனுக்கு நன்றி. முதலில் படத்தின் ஹீரோயின் சன்னிலியோன் என்று சொன்னார்கள். அது யாரென்று எனக்கு தெரியவில்லை, பிறகு என்னுடைய தம்பி ஆனந்த் சில படங்களை காமித்து இது தான் சன்னி லியோன் என்று சொன்னார்” என கூற அரங்கத்தில் இருந்த அனைவரும் விழுந்து..விழுந்து சிரித்தார்கள்.
unknown nodeGPb Muthu And Sunny Leone [Image Source: Twitter ]
பிறகு இதனை பார்த்த ஜிபி முத்து ஐயோ… சன்னிலியோன் என்றால் அவருடைய போட்டோவை காமித்தார். நீங்கள் எதுவும் தப்பாக நினைக்காதீர்கள்.. என்று கூறியுள்ளார். மேலும், இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.