இந்திய கிரிகெட் அணியின் முன்னாள் கேப்டன் மஹிந்திர சிங் தோனியின் வாழ்கை வரலாறு எம்.எஸ்.தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் வெளியாகி பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த படத்தை நீராஜ் பாண்டே இயக்கி இருந்தார். சுஜ்வர்த் சிங், திஷா பதானி ஆகியோர் நடித்திருந்தனர்.
இப்படத்தில் தோனியின் பள்ளிக்காலம் தொடங்கி உலககோப்பை வெல்லும் பகுதி வரை இடம் பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பேச்சுவார்த்தை பேசப்பட்டது.
இந்த இரண்டாம் பாகத்தில் தோனியின் டெஸ்ட் ஓய்வு , அதன் பிறகான சரிவுகள், சி.எஸ்.கே இரண்டு வருட தடை அதன் பின்னர் வந்த எழுச்சி என உருவாக உள்ளதாவும் இந்த வருடம் அதன் ஷூட்டிங் தொடங்கி அடுத்த வருடம் (2020) வெளியாக உள்ளது என தகவல்கள் வெளிவருகின்றன. இது எந்த அளவு உண்மை என தெரியவில்லை நடந்தால் நன்றாக தான் இருக்கும். உறுதியான தகவல்கள் வெளியாகும் வரை காத்திருப்போம்.
DINASUVADU