சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் தெலுங்கர்களே! பிரபல நடிகர் ஓபன் டாக்!

நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம்,

நடிகர் ராதாரவி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் தமிழில் மன்மதலீலை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகர் ராதாரவி சென்னையில் நடைபெற்ற எம்.ஆர்.ராதாவின் 40-ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியுள்ளார். அவர் பேசுகையில், தெலுங்கர்கள் இல்லை என்றால் தமிழகம் எப்படி வளர்ந்திருக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், சினிமாவில் பாதிக்கு மேற்பட்டோர் தெலுங்கர்கள் என்றும், பொதுவெளியில் சொன்னால் வாய்ப்புக குறைந்து விடுமோ என்ற தயக்கத்தில் அச்சப்படுகின்றனர் என்றும், நான் தெலுங்கன் என்ற பெருமையோடு இருக்கிறேன் என்றும் கூறியுள்ளார்.