மோகன்லாலின் உடற்கட்டை பார்த்து வாய்பிளந்த ரசிகர்கள்

this news gives information about Mohanlal's bodyguard is an avid fan-mohanlal udarkattai parththu vaipilantha rasikarkal

மோகன்லால் “மார்க்கர் “திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். இப்படத்திற் காக மோகன்லால் தனது உடலை மாற்றி அமைத்து வருகிறார். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக மோகன்லால் வலம் வருகிறார்.இவர் தமிழில்  தளபதி விஜய் உடன் “ஜில்லா” , கமலுடன்  “உன்னை போல் ஒருவன் ” ஆகிய படங்களில் நடித்துள்ளார்.தற்போது தமிழில் சூர்யாவுடன்  “காப்பான்”படத்திலும் நடித்து வருகிறார்.

தற்போது மலையாளத்தில்  “லூசிபர்” படத்தில் நடித்துள்ளார்.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் “லூசிபர்” படத்தின் டிரைலர் இதுவரை 5 மில்லியன் பார்வையாளர்களை கடந்து பல சாதனைகளையும் பெற்றுள்ளது.

தற்போது மோகன்லால் “மார்க்கார் “திரைப்படத்தில் நடித்தும் வருகிறார். இப்படத்திற் காக மோகன்லால் தனது உடலை மாற்றி அமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மோகன்லாலில் உடற்கட்டை பார்த்த அவரது ரசிகர்கள் ஆச்சரியத்தில் வாய்பிளந்து உள்ளனர்.

unknown node