கடவுள் நம்பிக்கையற்றவர்களுக்கு பேய்களின் மீது பிரியத்தை உண்டு பண்ணியவர் மிஷ்கின்.! -சீனு ராமசாமி

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும்,

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக மக்களுக்கு கொடுப்பதில் ஒரு சிறந்த இயக்குனர் மிஷ்கின். இவரது இயக்கத்தில் வெளியான ஓநாயும் ஆட்டுக்குட்டியும், துப்பறிவாளன், பிசாசு, ஆகிய திரைப்படங்கள் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்துள்ளது.

unknown node

இதில் பிசாசு படத்தின் முதல் பாகம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளதால், படத்திற்கான இரண்டாம் பாகத்தை இயக்குனர் மிஷ்கின் இயக்கியுள்ளார். இதில், ஆண்ட்ரியா , விஜய் சேதுபதி என பலர் நடித்துள்ளனர்.

unknown node

திகில் கலந்த இப்படத்தின் டீசர் நேற்று வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது என்றே கூறலாம். இந்த நிலையில், டிரைலரை பார்த்த இயக்குனர் சீனு ராமசாமி மிஷ்கினை புகழ்ந்து ட்வீட் செய்துள்ளார்.

unknown node

இது குறித்து அவர் கூறியது “பிசாசை தேவதையின் குணமாக சித்தரிக்கும் அருமை நண்பர் மிஷ்கின் நிகழ்கால பயங்காட்டி, சினிமா சதுர்வேதி, திரைமொழி சித்திக்கப்பட்ட கலைஞன். கடவுள் நம்பிக்கை யற்றவர்களுக்கும் பேய்களின் மீது பிரியத்தை உண்டு பண்ணியவர்.வாழ்த்துகிறேன் மிஷ்கின்” என பதிவிட்டுள்ளார்.

unknown node