சமீபத்தில் மீரா மிதுனுக்கு லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து மாநில இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டது.
தற்போது அவர் மீது FIR இருப்பதால் அவருக்கு கொடுக்கப்பட்ட பதவி பறிக்கப்பட்டது.
சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்தார்.
வெளியே வந்த பிறகும் மீரா மிதுன் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.பின்னர் தமிழ்நாட்டில் இருந்து சென்று மும்பையில் வேலை செய்தார்.மும்பையில் மீரா மிதுன் பொதுஇடத்தில் புகைபிடிப்பது போன்ற விடீயோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
unknown nodeசமீபத்தில் மீரா மிதுனுக்க லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்து மாநில இயக்குநர் பதவி கொடுக்கப்பட்டது. இதற்கு மீரா மிதுன் இனி என்னிடம் இருந்து யாரும் தப்ப முடியாது எனவும் கூறி ட்வீட் செய்து அதற்கான ஆவணங்களையும் வெளியிட்டார்.
இந்நிலையில் மீரா மிதுனுக்கு கொடுக்கப்பட்ட பதவி பறிக்கப்பட்டு விட்டதாக அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.பதவி பறித்தற்கான காரணம் அவர் மீதுள்ள FIR என குறிப்பிடப்பட்டு உள்ளது. ஆனால் மீரா மிதுன் இதற்கு நான் நேற்று தான் பார்த்தேன், எனக்கு எந்தவித லெட்டர் எதுவும் வரவில்லை என குறிப்பிட்டுள்ளார்.