விஜய் சேதுபதி, சுந்தீப் கிஷான் நடிக்கும் மைக்கேல் படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறார்.
இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் எனும் சென்சேஷனல் காதல் ரொமேன்டிக் ஹிட் கொடுத்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி, அடுத்ததாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்க்கு மைக்கேல் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
unknown nodeஇந்த படத்தில் இன்னோர் நாயகனாக தெலுங்கு நடிகர் சுந்தீப் கிஷான் நடிக்கிறார். இவர் மாநகரம் படத்தில் இன்னோர் ஹீரோவாக நடித்து இருந்தார்.
ஆக்சன் படமாக உருவாகும் இந்த படத்தில் வில்லனாக கெளதம் மேனன் நடிக்கிறாராம். இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. கையில் ரத்தம் தெறிக்க ஒரு போஸ்டர் வெளியாகியுள்ளது. அதில் கெளதம் மேனனை வரவேற்கிறோம் என அவர் நடிப்பதை உறுதி செய்துள்ளனர்.