வாழ்க்கையில் இது ரொம்ப முக்கியம் : நடிகை தீபிகா படுகோனே

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கன்னடம் மொழி படங்களில் நடித்துவருகிறார்.

நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் தமிழில் கோச்சடையான் படத்தில் நடித்துள்ளார். இவர் அதிகமாக கன்னடம் மொழி படங்களில் நடித்துவருகிறார். இவரது நடிப்பில் வெளியாகியுள்ள படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்நிலையில், நடிகை தீபிகா படுகோனே, பிரபலங்கள் தங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை வெளிப்படையாக பேச வேண்டும் என்றும், மனஅழுத்தம், சோகம் இரண்டுக்கும் வித்தியாசம் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், மன அழுத்தம் எனில் அதை தீர்க்க உரிய சிகிச்சை அவசியம் என்றும், இது அச்சப்படும் விஷயமல்ல, உடல் ஆரோக்கியத்தை போல், மனஆரோக்கியமும் அவசியம் என்று கூறியுள்ளார்.