பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார் நடிகை மீரா மிதுன்.
இவர் அவ்வப்போது தனது இணையதள பக்கத்தில் புதிய வீடியோ ஏதேனும் ஒன்றை பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிவிடுகிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர் மீது கொலை மிரட்டல், மோசடி புகார்களும் பதியப்பட்டு, பத்திரிக்கையாளர்களிடம் கருத்து தெரிவித்து பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார்.
இவர் தனது இணையதள பக்கத்தில் ஏதேனும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்துவார். ஏற்கனவே புகைபிடிக்கும் போட்டோவை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கினார். இவர் அண்மையில் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், தனது ஆண் நண்பருடன் ஒரு படுக்கையறையில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் திரைப்படத்தில் இடம்பெற்றிருந்த சில் ப்ரோ பாடலுக்கு கலக்கலாக குத்தாட்டம் போட்ட விடியோவை பதிவிட்டு உள்ளார். இதனை ரசிகர்கள் வெகுவாக பகிர்ந்து வருகின்றனர்.
unknown node