உலகநாயகன் விழாவிற்கு வந்த வைரமுத்துவை சாடிய பாடகி சின்மயி! MeToo சர்ச்சை!

சினிமா பின்னணி பாடகி சின்மயி,  சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ  புகார் அளித்து இருந்தார். சிறுவயதில் நடந்த பாலியல் சீண்டலையும்

சினிமா பின்னணி பாடகி சின்மயி,  சினிமா பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றசாட்டான மீ டூ  புகார் அளித்து இருந்தார். சிறுவயதில் நடந்த பாலியல் சீண்டலையும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் சினிமா நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை.இந்நிலையில் அண்மையில் உலகநாயகன் கமல்ஹாசன் தயாரிப்பு அலுவலகத்தில் நடைபெற்ற இயக்குனர் கே.பாலச்சந்தர் சிலை திறப்பு விழாவில் வைரமுத்து கலந்து கொண்டார்.இது குறித்து பாடகி சினமயி கருத்து தெரிவித்தார். அதில், பாலியல்  குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒரு நபர் பொதுவிழாக்களில் கலந்துகொள்வதில்லை. ஆனால் கவிஞர் வைரமுத்து கடந்த ஒரு வருடமாக அரசியல் நிகழ்வுகள், சினிமா நிகழ்வுகள், புத்தக வெளியீட்டு விழாக்கள் என அனைத்திலும் கலந்து கொள்கிறார். ஆனால், நான் தான், சினிமா நிகழ்ச்சிகளில் புறக்கணிக்கப்பட்டு வருகிறேன்.’  என தெரிவித்துள்ளார்.