பிப்ரவரி ஓடிடியில் ரிலீஸாகும் மாஸ்டர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!

It has been reported that the master movie is likely to be released on ODT in the second week of February as Amazon.

மாஸ்டர் திரைப்படத்திற்கான ஓடிடி  ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் வாங்கியுள்ள நிலையில் பிப்ரவரி மாதத்தின் இரண்டாவது வாரத்தில் மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் நடிகர் விஜய் மற்றும் அவருக்கு ஜோடியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி நடித்து பொங்கலுக்கு முன்தினம் வெளியிடப்பட்டு வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் புதிய தமிழ் திரைப்படம் தான் மாஸ்டர். இந்த திரைப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தாமதமாக வெளியிடப்பட்டு இருந்தாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் விமர்சனத்தையும் பெற்றுள்ளது. சில எதிர்மறையான கருத்துக்கள் இருந்தாலும் படம் இன்று வரையிலும் உலக அளவில் 200 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே தளபதி ரசிகர்கள் மாஸ்டர் படத்தை டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து வரும் நிலையில், மாஸ்டர் படத்திற்கான ஓடிடி ரிலீஸ் உரிமையை அமேசான் நிறுவனம் தற்போது வாங்கியுள்ள நிலையில் மாஸ்டரின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. படம் இந்த மாதம் தான் திரையிடப்பட்டு உள்ளதால் ஒரு மாதத்திற்குப் பின்பு தான் ஓடிடியில் படங்கள் வெளியிடுவதற்கு அனுமதி கிடைக்கும். அது போல மாஸ்டர் திரைப்படமும் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் ஓடிட்டியில் ரிலீஸ் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

பிப்ரவரி ஓடிடியில் ரிலீஸாகும் மாஸ்டர் – உற்சாகத்தில் ரசிகர்கள்!