மிரட்டும் தளபதி விஜய் -மக்கள் செல்வன் விஜய் சேதுபதி.! மாஸாக வெளியான மாஸ்டர் லுக் .!

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாக மாஸ்டர் ( MASTER ) திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய்

தளபதி விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் அவரது 64 திரைப்படமாகமாஸ்டர் ( MASTER )திரைப்படம் தயாராகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கநகராஜ் இயக்கியுள்ளார். விஜய் சேதுபதி இப்படத்தில் நடித்து வருகிறார். மாளவிகா மோகனன், சந்தனு, அர்ஜுன் தாஸ் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர்.மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு சென்னை, டெல்லி ,கர்நாடகா மாநிலம் ஷிமோகா என்று பல இடங்களில்  விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

unknown node

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ஆனால் இந்த இரண்டு போஸ்டரிலும் விஜய் மட்டுமே இருந்தார்.ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய் சேதுபதி இல்லை. இந்நிலையில் இன்று குடியரசு தினம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.இதனையொட்டி நேற்று படக்குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது .அந்த அறிவிப்பில்,மாஸ்டர் படத்தின் மூன்றாவது லுக் போஸ்ட இன்று வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.அதன்படி இன்று படத்தின் மாஸான  மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.இந்த போஸ்டரில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் இணைந்தபடி வெளியான மிரட்டலான லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.