தனுஷின் "D43" படத்தில் இணைந்த மாஸ்டர் பவானி.!

It has been reported that Mahendran has joined Dhanush's D43 film.

தனுஷின் D43 படத்தில் மகேந்திரன் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் “D43” படத்தில் நடிக்கவுள்ளார். அதில் தனுஷூக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளார்.மேலும் தனுஷின் இந்த ‘D43’ படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ளார் .மேலும் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகவுள்ள D43 படத்தில் ஸ்மிருதி வெங்கட் சமுத்திரக்கனி , கிருஷ்ணகுமார் ஆகியோர் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாகவும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது.மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் படப்பிடிப்பு தொடங்கி முதல்கட்ட படப்பிடிப்பை முடித்தனர்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் மீண்டும் ஒரு முக்கிய பிரபலம் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் D43 படத்தில் நடிகர் மகேந்திரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.இவர் சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படத்தில் சிறுவயது பவானியாக நடித்து பலரது பாராட்டுகளை பெற்று பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node