தனுஷ்-செல்வராகவன் கூட்டணியில் உருவாகும் படம் குறித்து வெளியான மாஸ் தகவல்.!

Filming for the Selvaragavan-directed Dhanush starrer is set to begin in March next year. ..This film is being produced by Kalaipuli S.Thanu

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இயக்குனர் செல்வராகவன் பல தரமான படங்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார்.கடைசியாக இவரது இயக்கத்தில் சூர்யாவின் என்ஜிகே படம் வெளியாகியது.மேலும் இவர் தற்போது கீர்த்தி சுரேஷூடன் இணைந்து சாணிக் காயிதம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாக உள்ளார் .

ஏற்கனவே செல்வராகவன் தனது தம்பி தனுஷூடன் இணைந்து அடுத்த படத்தை இயக்கவுள்ளதாக கூறியிருந்தார்.அது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகம் என்றும் கூறப்பட்டது ‌.தற்போது செல்வராகவன் மற்றும் தனுஷ் கூட்டணியில் உருவாகும் படத்தினை குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது இந்த படத்தின் படப்பிடிப்பினை அடுத்தாண்டு மார்ச் மாதத்திற்குள் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.கலைப்புலி எஸ்.தானு தயாரிக்கும் இந்தப் படத்திற்கு சீன் ரோல்டன் இசையமைக்கிறார் . தனுஷ் கார்த்திக் நரேனின் படத்தினை முடித்த பின்னரே செல்வராகவன் படத்தில் இணைவார் என்று கூறப்படுகிறது.