Manjummel Boys: சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ தமிழ்நாட்டு வசூலில் கலக்கி வருகிறது. இப்படம் உலகம் முழுவதிலும் மொத்தம் ரூ.200 கோடியை நெருங்கியதுடன், மலையாள சினிமாவில் அதிகம் வசூலித்த முதல் படம் என்ற சாதனையையும் படைத்துள்ளது.
READ MORE –கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!
5 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூ.50 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் தமிழில் வெளியாகி ரூ.50 கோடியை கடந்த முதல் மலையாள திரைப்படம் என்ற சாதனையை படைத்துள்ளது. உலக அளவில் 175 கோடிகளை வசூலித்துள்ள இப்படம் விரைவில் ரூ.200 கோடியைத் தாண்டும் எனத் தெரிகிறது.
unknown nodeManjummel Boys in tamil [File Image]
READ MORE –எம்மாடியோ! ராகவா லாரன்ஸ் படத்திற்கு இத்தனை கோடி பெட்ஜெட்டா?
கடைசியாக மலையாளத்தில் டோவினோ தாமஷ் நடிப்பில் வெளியான 2018 திரைப்படத்தை தொடர்ந்து, மஞ்சுமெல் பாய்ஸ் படம் மலையாளத்தில் ரூ.100 கோடி வசூல் செய்த 4வது படம் என்ற சாதனையை தாண்டி, இன்னும் ஓரிரு நாட்களில் ரூ.200 கோடி வசூலித்தால், மலையாளத்தில் இதுவரை யாரும் செய்திடாத சாதனையாக பார்க்கப்படும்.
READ MORE –அலைகள் ஓய்வதில்லை படத்தால் நொந்துபோன தியாகராஜன்! மனுஷன் ரொம்ப பாவம் தான்!
இயக்குனர் சிதம்பரம் எஸ் பொதுவால் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் காலித் ரஹ்மான், காலித் ரஹ்மான், கணபதி எஸ் பொதுவால், ஸ்ரீநாத் பாசி உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
