மஞ்சும்மல் பாய்ஸ் கொடுத்த பெரிய வெற்றி..பாலிவுட்டுக்கு பறந்த இயக்குனர் சிதம்பரம்!

சிதம்பரம் : இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவால் இயக்கத்தில் ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்ட எடுக்கப்பட்டு வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ஹிட் ஆனது. மலையாள திரைப்படமான இந்த படம் மலையாளத்தையும் தாண்டி எல்லா மொழிகளிலும் ஹிட் ஆனது.
20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகளுக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய ஹிட் படமானது. இந்த படத்தின் மூலம் இயக்குனர் சிதம்பரம் எஸ்.பொதுவாலுக்கு எல்லா மொழிகளில் இருந்தும் படங்களை இயக்குவதற்கான வாய்ப்புகள் வந்து கொண்டு இருப்பதாக தெரிகிறது.
அவர் ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தினை தொடர்ந்து எந்த மொழியில் படத்தினை இயக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்த நிலையில், அவர் அடுத்ததாக பாலிவுட்டுக்கு சென்று படத்தினை இயக்கவுள்ளார். படத்தில் யார் ஹீரோவாக நடிக்கிறார் யாரெல்லாம் படத்தில் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகவில்லை.
இருப்பினும், சிதம்பரம் எஸ்.பொதுவால் பாலிவுட் படத்தினை தான் அடுத்ததாக இயக்கப்போகிறார் என்பதற்கான அறிவிப்பு மட்டும் வெளியாகி இருக்கிறது. அவர் இயக்கும் அந்த படத்தினை PhantomStudios நிறுவனம் தான் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிக்கவுள்ளது. விரைவில் படத்தில் யாரெல்லாம் நடிக்கிறார்கள் என்பதற்கான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படத்தினை தொடர்ந்து பாலிவுட்டுக்கு சென்ற சிதம்பரம் எஸ்.பொதுவாலுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025