Premalu: மலையாள சினிமாவில் சமீபத்தில் வெளியான “பிரேமலு” திரைப்படம் ரூ.100 கோடி கிளப்பில் இணைந்தது. சமீப காலமாக மலையாள சினிமாவின் திரைப்படங்கள் கடந்து தமிழ் தெலுங்கு இந்தியன அனைத்து மொழிகளிலும் சக்கை போடு போட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக தமிழ் சினிமாவில் அமோக வரவேற்பு பெற்று வருகிறதை பார்க்கிறோம்.
READ MORE –இளைஞர்களை கொண்டாட வைத்த ‘பிரேமலு’! ஓடிடிக்கு எப்போது வருகிறது தெரியுமா?
அதிலும் மலையாள சினிமாவின் மிகப்பெரிய நடிகரான மம்முட்டி அவர்களின் ‘பிரம்மயுகம்’ திரைப்படம் ஒரு வாரம் நன்றாக ஓடியது, அதன் பின் அதன் மோகம் அப்படி நின்று விட்டது. அதற்கு அடுத்தபடியாக சிறிய பட்ஜெட்டில் உருவான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம் அமோக வரவேற்பு பெற்று கோடிக்கணக்கில் வசூல் செய்து, மலையாள சினிமாவில் நூறு கோடியை கடந்த நான்காவது படம் என்ற சாதனை படைத்தது.
READ MORE –பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!
இதனைத் தொடர்ந்து காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘பிரேமலு’ என்ற திரைப்படம் மலையாளத்தில் நல்ல வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டிருந்த நிலையில், இப்பொழுது தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளனர். தற்போது இந்த திரைப்படமும் சிறிய பட்ஜெட் திரைப்படம் என்றாலும், ரூ.100 கோடியை கடந்து மிகப்பெரிய சாதனை படைத்தது.
unknown nodePremalu 31 Days Worldwide Gross [FILE IMAGE]
READ MORE –மொத்தம் 4 மணி நேரம் ரெக்கார்டிங்! யுவனால் நொந்துபோன தளபதி விஜய்?
இதன் மூலம் மலையாள சினிமாவில் ரூ.100 கோடி வசூலை கடந்த 5 திரைப்பட என்ற சாதனையை பெற்று இருக்கிறது. படம் கடந்த 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இயக்குனர் கிரீஷ் ஏ.டி. எழுதி இயக்கிய இந்த திரைப்படத்தில் சங்கீத் பிரதாப், ஷியாம் மோகன் எம், மீனாட்சி ரவீந்திரன், அகிலா பார்கவன், அல்தாஃப் சலீம், மேத்யூ தாமஸ் ஆகியோருடன் நஸ்லென் கே கஃபூர் மற்றும் மமிதா பைஜு உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருந்தார்கள்
