பவன் கல்யாணுக்கு நன்றி தெரிவித்த லோகேஷ் கனகராஜ்.! காரணம் என்ன.?

தான் இயக்கிய படங்களை பிடிக்கும் என பவன் கல்யாண் கூறியதால் அவருக்கு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

Andhra Pradesh Deputy CM Pawan Kalyan - Lokesh Kanagaraj

சென்னை :ஆந்திர மாநில முதலமைச்சரும், நடிகருமான பவன் கல்யாண், தற்போது தான் திருப்பதி லட்டு விவகாரத்தில் ஏழுமலையானுக்கு களங்கம் விளைவித்ததாக கூறி, 11 நாள் விரதமிருந்து நேற்று தனது 2 மகள்களுடன் திருப்பதி ஏழுமலையானை தரிசித்தார்.

திருப்பதி லட்டு விவகாரம் இந்தியா முழுக்க பேசு பொருளாக இருந்த சமயத்தில் அண்மையில் தமிழ் தொலைக்காட்சி ஒன்றிற்கு பவன் கல்யாண் பேட்டியளித்திருந்தார். அப்போது, அரசியல் தொடர்பாக பல்வேறு கருத்துக்களை கூறினார். அப்படியே தமிழ் சினிமா பற்றியும் பேசினார்.

அப்போது , நடிகர் யோகி பாபு நடிப்பு பிடிக்கும் என கூறினார். மேலும், இயக்குனர் லோகேஷ் கனகராஜின் லியோ, விக்ரம் படங்களை பார்த்துள்ளேன். அவரது இயக்கம் பிடிக்கும் என லோகேஷ் கனகராஜை , பவன் கல்யாண் பாராட்டி இருந்தார்.

இதனை குறிப்பிட்டு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ” இந்த வார்த்தைகளைக் கேட்பது உண்மையிலேயே பெருமையாக இருக்கிறது பவன் கல்யாண் சார். எனது திரைப்பட வேலையை நீங்கள் விரும்பியுள்ளீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன். மிக்க நன்றி நன்றி பவன் கல்யாண் சார் ” என பதிவிட்டுள்ளார்.

unknown node