விஜயகாந்த் மேல ஒழுங்கா அன்பு காட்டல…அருமை இப்போது தான் புரியுது…லிவிங்ஸ்டன் வேதனை!

Vijayakanth : கேப்டன் விஜயகாந்த் இல்லாதபோது தான் அவருடைய அருமை புரிகிறது என லிவிங்ஸ்டன் கூறியுள்ளார்.
கேப்டன் விஜயகாந்த் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் செய்த உதவிகள் அவருடைய எண்ணத்தை காலத்தால் அழியாதவையாக பார்த்துக்கொள்ளும் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சாப்பாட்டில் இருந்து பணம் கொடுத்து உதவுவது பல உதவிகளை விஜயகாந்த் செய்து இருக்கிறார். எனவே, அவர் இவ்உலகில் இல்லை என்றாலும் கூட தினம் தினம் அவரை பற்றி பலரும் பெருமையாக பேசி கொண்டு வருகிறார்கள்.
அந்த வகையில், விஜயகாந்துடன் படங்களில் இணைந்து நடித்த பிரபல நடிகரான லிவிங்ஸ்டன் பேட்டி ஒன்றில் விஜயகாந்த் இருக்கும்போது அவருடைய அருமை புரியவில்லை இப்போது தான் புரிகிறது என வேதனையுடன் பேசியுள்ளார். இது குறித்து பேசிய லிவிங்ஸ்டன் ” என்னை நடிகராக அறிமுகம் செய்தது கேப்டன் விஜயகாந்த் தான். அறிமுகம் செய்தது மட்டுமின்றி தொடர்ச்சியாக என்னை படங்களிலும் நடிக்க வைத்தார்.
குறிப்பாக பாட்டுக்கு ஒரு தலைவன், ஏழை ஜாதி, என எல்லா படங்களிலும் தொடர்ச்சியாக எனக்கு நடிக்க வாய்ப்பு கொடுத்தார். இப்போது தான் நான் அதனை நன்றியாக சொல்கிறேன். அந்த அளவிற்கு வார்த்தைகளால் சொல்ல முடியாத அளவுக்கு என் மீது பாசமாக அவர் இருந்தார். அவர் என் மீது செலுத்திய அன்பை போல நான் அவர் மீது செலுத்த தவறிவிட்டேன்.
அவர் இப்போது இந்த இல்லை அவரை இழந்த பிறகு தான் எனக்கு இது புரிகிறது . ஒரு விலை உயர்ந்த பொருள் நம்மலுடன் இருக்கும்போது அதனுடைய அருமை நமக்கு புரியாது இல்லாத போது தான் புரியும் அப்படி தான் கேப்டன். உண்மையில் அவரை போல ஒரு நல்ல மனிதரை நம்மலால் பார்க்கவே முடியாது. அவரை ரொம்பவே நான் மிஸ் பண்றேன்” எனவும் லிவிங்ஸ்டன் வேதனையுடன் கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025