நடிகை அஞ்சலி தற்போது “லிசா” படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இன்று மாலை வெளியிடுகிறார்.
நடிகை அஞ்சலி கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர்.இந்நிலையில் இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தில் நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார்.
அதற்கு பிறகு இவர் “அங்காடி தெரு “படத்தில் நடித்ததன் மூலம் மிக சிறந்த நடிகைக்கான விருதை வென்றார்.இந்நிலையில் இந்த படம் இவருக்கு மக்கள் மத்தியில் மிக பெரிய பெயரை பெற்று தந்தது.
இந்நிலையில் இவர் தற்போது “லிசா” படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் ராஜு விஸ்வநாத் இந்த படத்தை இயக்குகிறார்.தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் வெளியாக உள்ளது.
unknown nodeபி.ஜி மீடியா வொர்க்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தின் தமிழ் டீஸர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.இப்படத்திற்கு சந்தோஷ் உதயநிதி இசையமைக்கிறார்.இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு டீஸரை பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இன்று மாலை 8 மணிக்கு வெளியிடுகிறார்.