ஓராண்டை நிறைவு செய்த ‘லியோ’ – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உருக்கமான பதிவு!

'லியோ' திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்த நிலையில், இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தளத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

1YearofLeo

சென்னை :இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், த்ரிஷா, கவுதம் மேனன், அர்ஜுன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்த ‘லியோ’ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவு செய்துள்ளது.

தளபதி விஜய் நடிப்பில் 2023 ஆம் ஆண்டு வெளியான லியோ அதிக வசூல் செய்த மூன்றாவது தமிழ் திரைப்படமாக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், உலகளவில் அதிக வசூல் செய்த தமிழ் திரைப்பட என்ற பெருமையும் பெற்றது.

இது தமிழ்நாட்டின் அதிக பாக்ஸ் ஆபிஸ் வசூலை பதிவு செய்ததோடு, மொத்த வசூல் சுமார் ரூ.620 கோடியை அள்ளிச் சென்றது. இப்படத்தில் த்ரிஷா கிருஷ்ணன், சஞ்சய் தத், மற்றும் அர்ஜுன் சர்ஜா மற்றும் பலர் நடித்தனர்.

இந்த நிலத்தில், லியோ திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஓராண்டு நிறைவையொட்டி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில், “நிறைய பாடங்கள், நிறைய நினைவுகள், நிறைய அழகான தருணங்கள், என் மனதிற்கு எப்போதும் நெருக்கமான படம் ‘லியோ’.

Love you so much விஜய் அண்ணா. இதை சாத்தியமாக்கியதற்கு நன்றி. இந்த படத்திற்காக வியர்வையையும், ரத்தத்தையும் சிந்தி உழைத்த அனைவருக்கும் கடமைப்பட்டிருக்கிறேன். ரசிகர்களுக்கு நன்றி” என்று எமோஷ்னலாக பதிவிட்டுள்ளார்.

unknown node