ராக்கி பாயை அலற விடப்போகும் லியோ தாஸ்! கேரளாவில் முரட்டு சம்பவம் லோடிங்!

leo vijay vs kfg

விஜயின் படங்கள் வெளியானால் அது எந்த அளவிற்கு வசூலை குவியும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். குறிப்பாக கடைசியாக அவருடைய நடிப்பில் 2023-ஜனவரி மாதம் திரையரங்குகளில் வெளியான “வாரிசு” திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடிகளுக்கு மேல் வசூல் செய்திருந்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து அவருடைய நடிப்பில் ‘லியோ’ திரைப்படம் வெளியாகவிருக்கிறது.

லியோ 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் விஜய்யுடன், சஞ்சய் தத், கெளதம் மேனன், த்ரிஷா, அர்ஜுன், மன்சூர் அலிகான், கெளதம் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leo in LCU : லியோ ‘LCU’ தான்! உண்மையை உடைத்த ரோலக்ஸ் கேங்க்! கடும் அப்செட்டில் லோகேஷ்!

வெளியீடு 

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைபடம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

Leo Fourth Single: அக்டோபர் 16ம் தேதி சம்பவம் உறுதி.! ‘லியோ’வின் 4வது சிங்கிள் அப்டேட்…

எதிர்பார்க்கப்படும் வசூல் 

கண்டிப்பாக லியோ திரைப்படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்த்தால் படம் கண்டிப்பாக உலகம் முழுவதும் 50 கோடிகளுக்கு மேல் வசூல் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மட்டும் படம் 30 கோடி வரை வசூல் செய்யலாம் என கூறப்படுகிறது. அதைப்போல கேரளாவில் படம் முதல் நாளில் அதிக வசூல் செய்த படமாக மாற வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் விஜயின் மார்க்கெட் 

நடிகர் விஜயின் படங்கள் கேரளாவில் வெளியானாலே அதற்கு தமிழகத்தில் கிடைக்கும் வரவேற்புக்கு இணையாக கிடைக்கும். இதில் லியோ படத்தை பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருப்பதன் காரணமாக கண்டிப்பாக கேரளாவில் படம் முதல் நாள் வசூலில் புதிய சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரளாவில் முதல் நாளில் அதிகம் வசூல் செய்த திரைப்படமாக கேஜிஎப் 2 -7கோடிகளுக்கு மேல் வசூல் செய்து முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால், லியோ படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பு இருப்பதன் காரணமாக கண்டிப்பாக அந்த வசூலை முறியடிக்க வாய்ப்புள்ளதாக சினிமா ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். கேரளாவில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் 6 கோடி வரை வசூல் செய்திருந்தது. எனவே லியோ படம் எத்தனை கோடி வசூல் செய்யப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்