மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட்..!!

The film crew is reportedly planning to release the conference movie on May 14th

மாநாடு திரைப்படம் வருகின்ற மே 14 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்.

நடிகர் சிம்பு தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். மேலும் பாரதிராஜா, கருணாகரன், பிரேம்ஜி,எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்கள். மேலும் இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு முடிந்து டிரைலர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த மாநாடு திரைப்படம் வருகின்ற மே 14 ஆம் தேதி வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.