கேஜிஎஃப் 2 தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை பிரபல தொலைக்காட்சி பெற்றுள்ள்ளதாக நடிகர் யாஷ் அறிவித்துள்ளார்.
இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி என 5 மொழிகளில் பிரமாண்டமாக வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் முதல் பாகத்தை பார்த்து சிலிர்த்த ரசிகர்கள் இரண்டாம் பாகம் எப்போது வரும் என ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
unknown nodeரசிகர்கள் எதிர்பார்த்தைதை போல கே.ஜி.எப் இரண்டாம் பாகத்தின் முழு வேலையும் முடிவடைந்து விட்டது. படத்தை ரிலீஸ் செய்வது மட்டுமே முதல் வேலை. அப்படி இருக்க நாடு முழுக்க கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு மாநிலங்களில் திரையரங்குகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால், பல திரைப்படங்கள் ஓடிடி-யில் வெளியாகி வருகிறது. இதனால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு வருகிறது.
பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் திரையரங்குகள் திறந்த பிறகே ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தின் தென்னிந்திய தொலைக்காட்சி உரிமையை ஜி தொலைக்காட்சி நிறுவனம் பெற்றுள்ள்ளதாக நடிகர் யாஷ் அறிவித்துள்ளார்.
unknown node