20 வயசு நடிகருடன் காதல்? விஜய் ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ் சொன்ன ‘நச்’ பதில் ..!
கீர்த்தி சுரேஷ் : மலையாள சினிமாவில், 2000-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து கொண்டு வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரெமோ, ரஜினி முருகன், சர்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார்.
அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் அவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் தொடர்ந்து பல சர்ச்சைகளில் இவரது பெயர் அடிப்பட்டது.
இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் வித்யாசமான கதை களத்தில் நடித்து வரும் திரைப்படம் தான் ‘ரகு தாத்தா’. சுமன் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி, ரவீந்திர விஜய் உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள்.
இந்த படம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் இப்படத்தின் ப்ரமோஷனுக்காக கீர்த்தி சுரேஷ் மற்றும் பட குழுவினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அதில் சமீபத்தில் இப்படத்தின் பத்திரிகையளர்கள் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டார்.
அதில் கீர்த்தி சுரேஷிடம் பத்திரிகையாளர் ஒருவர், “20 வயது நபர் ஒருவரை நீங்கள் காதலிப்பதாக வெளிவந்த தகவல் பற்றி கேள்வி எழுப்பினார்கள். அந்த கேள்விக்கு கீர்த்தி சுரேஷ், “நடிகர் விஜய் சொன்னது போல் இது போன்ற வதந்திகளுக்கு விளக்கம் கொடுத்தால் அது உண்மையாக விடும்.
அதனால், எனவே அதை புறக்கணித்து விடுவோம். நடிப்பு குறித்த விமர்சனங்களை ஏற்றுக்கொள்கிறேன். ஒரு நடிகையாக அதை என்னை மேலும் மேம்படுத்தும். ஆனால், இது போன்ற வதந்திகள் என்னை பெரிதாக பாதிக்காது. நான் அதை கண்டுகொள்ளவும் மாட்டேன்”, என கீர்த்தி சுரேஷ் பதிலளித்தார்.