கீர்த்தி சுரேஷ் : மலையாள சினிமாவில், 2000-ம் ஆண்டுகளில் இருந்து நடித்து கொண்டு வரும் நடிகை தான் கீர்த்தி சுரேஷ். அவர் தமிழில் ‘இது என்ன மாயம்’ என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி தொடர்ந்து ரெமோ, ரஜினி முருகன், சர்கார், பைரவா போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமா துறையில் அவரது நடிப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படமான ‘மகாநடி’ படத்தில் நடித்து சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. […]