காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

கீர்த்தி சுரேஷிற்கு இன்று திருமணம் நடந்து முடிந்த நிலையில், அவருக்கு ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Keerthy Suresh Marriage

கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ?  என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த கேள்விகளுக்கு ஸ்விட் கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் இவர் தான் பல வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன்.. இவரை தான் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாகவே கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார்.

Keerthy Suresh Marriage Pic
Keerthy Suresh Marriage Pic [File Image]
அவர் அறிவித்தது போலவே, இன்று அவருக்கும் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை கோவாவில் திருமணம் செய்து கொண்டார். இரு வீட்டாருடைய பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் மற்றும் நெருங்கிய சினிமா பிரபலங்கள் மட்டுமே இவர்களுடைய திருமணத்தில் கலந்துகொண்டார்கள்.

Keerthy Suresh Marriage Photo
Keerthy Suresh Marriage Photo [File Image]
கீர்த்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஆண்டனி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர் என்பதால், இவர்களுடைய திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடந்துள்ளதாகவும் தெரிகிறது.

Keerthy Suresh Marry Photo
Keerthy Suresh Marry Photo [File Image]
திருமணம் முடிந்த ஆனந்தத்தில் கீர்த்தி சுரேஷ் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்ததும் இருக்கிறார். அவருடைய திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி கொண்டு வருகிறது.

Keerthy Suresh with his husband
Keerthy Suresh with his husband [File Image]
புகைப்படங்களை பார்த்த பலரும் புது பொண்ணுக்கு வெட்கத்தை பாருங்கள் எனவும், நீங்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழவேண்டும் எனவும் ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்