கருத்து வேறுபாடால் பட ரீமேக்கில் இருந்து விலகினார் ஷாருக்கான்…!!!
மாதவன், விஜய் சேதுபதி நடித்து கடந்த வருடம் வெளியான படம். புஷ்கர் காயத்ரி இயக்கி இருந்த இந்த ஹிட் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். இந்த படத்தை பார்த்த ஷாருக், இதன் இந்தி ரீமிக்கில் நடிக்க சம்மதம் தெரிவித்திருந்தார் முதலில். அவருக்கு விஜய் சேதுபதி நடித்திருந்த வில்லன் கேரக்டர் பிடித்திருந்தது. அதில் நடிக்க முடிவு செய்திருந்தார்.
ஆனால் பட தயாரிப்பு நிறுவனம் அவரை மாதவன் கேரக்டர்களில் நடிக்குமாறு கேட்டார்களாம். அதோடு இந்த படத்தை ஷாருக்கான் இயக்கி நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்தது. பின்னர் கதையில் சில மாற்றங்கள் செய்யவும் ஆலோசிக்கப்பட்டது. இதில் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இந்த படத்தின் ரீமேக்கில் இருந்து ஷாருக்கான் விலகியுள்ளதாக கூறப்படுகிறது.