பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கினார் கார்த்தி. சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிக்க முன்வந்தது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு தென்காசியை சுற்றியுள்ள பகுதிகளில் தொடங்கப்பட்டது. சாயிஷா சைகல், சத்யராஜ், சூரி, ஸ்ரீமன், ப்ரியா பவானி சங்கர், பானுப்ரியா, மௌனிகா உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். இதன் பெரும்பகுதி படப்பிடிப்பை முடித்துவிட்டது படக்குழு. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைப்பாளராக பணிபுரிந்து வருகிறார். படத்தின் தலைப்பு என்ன என்பது தெரியாமல் இருந்தது.
unknown nodeஇந்நிலையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, படத்தின் பெயர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி ‘கடைக்குட்டி சிங்கம்’ என்ற பெயர் அடங்கிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார்.இப்போஸ்டரில் இடம்பெற்றுள்ள ‘பயிர் செய்ய விரும்பு’ என்ற வாசகம் சமூகவலைத்தளத்தில் வரவேற்பைப் பெற்றது. இறுதிகட்டப் படப்பிடிப்பை முடித்து ஏப்ரலில் வெளியிட படக்குழு முடிவு செய்திருக்கிறது.