WWE ரெஸ்லிங் போட்டியாளருடன் களத்தில் இறங்கிய கார்த்தி…அனல் பறக்கும் புதிய வீடியோ.!

Default Image

மக்கள் அதிகம் விரும்பி பார்க்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று (WWE) வேர்ல்டு ரெஸ்ட்லிங் எண்டர்டெயின்மென்ட் . இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்துவரும் சோனி ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி இன்று காலை சூப்பரான அறிவிப்பு ஒன்றை வீடியோவுடன் வெளியிட்டிருந்தது.

WWE Karthi
WWE Karthi [Image Source: Google]

அந்த வீடியோவில் நடிகர்கள் கார்த்தியும், ஜான் ஆபிரஹாம் மற்றும் ரெஸ்ட்லிங் சூப்பர் ஸ்டார் ட்ரூவுடன் ஆகிய மூன்று பேரும் ரெஸ்ட்லிங் செய்ய தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள் என்பது போல கட்டப்பட்டுள்ளது .  அந்த வீடியோவை பார்த்த பலரும் இருவரும் ரெஸ்ட்லிங் போட்டியில் மோதவிருக்கிறார்களா..? என கேள்வி எழுப்ப தொடங்கினர்.

ஆனால், கார்த்தி ரெஸ்ட்லிங் எல்லாம் செய்யவில்லை இந்த (WWE)  நிகழ்ச்சி தமிழிலும் ஒளிபரப்பாகவுள்ளது. எனவே, இதனை ப்ரோமோஷன் செய்வதற்காக நடிகர் கார்த்தி தமிழுக்கான விளம்பரத்திற்காக நடித்துள்ளார். அவர் நடித்துள்ள அந்த ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Japan
Japan [Image Source: Twitter]

மேலும், விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என தொடர்ந்து மூன்று வெற்றிப்படங்களை கொடுத்த கார்த்தி தற்போது இந்திய அளவில் பிரபலமாகி இருக்கிறார். தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து ஹிட் கொடுத்து வரும் கார்த்தி அடுத்தாக இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி வரும் “ஜப்பான்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்