கார்த்தி கடைக்குட்டி சிங்கம்’ படத்தைத் தொடர்ந்து நடிக்கும் புதிய படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
unknown nodeபாண்டிராஜ் இயக்கத்தில் ‘கடைக்குட்டி சிங்கம்’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இதன் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படத்தை சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரித்து வருகிறது.
unknown nodeஇப்படத்தைத் தொடர்ந்து ரிலையன்ஸ் எண்டெர்டைன்மென்ட் வழங்க, பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ். லஷ்மண்குமார் தயாரிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடிக்கிறார்.
unknown nodeரகுல் பிரீத் சிங் நாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரகாஷ்ராஜ், ரம்யா கிருஷ்ணன், ஆர்.ஜே. விக்னேஷ், அம்ருதா, ரேணுகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய வேடத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிக்கிறார். கார்த்தியும் கார்த்திக்கும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது என்பது கவனிக்கத்தக்கது.
இயக்குநர்கள் அனுராக் காஷ்யப், சரவணன், ஆர்.கண்ணன் ஆகியோரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த ரஜத் ரவிசங்கர் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகம் ஆகிறார். ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 8-ம் தேதி சென்னையில் ஆரம்பமாகிறது. இதைத் தொடர்ந்து ஐரோப்பாவில் 15 நாட்களும், அதைத் தொடர்ந்து ஹைதராபாத், மும்பை, இமயமலை பகுதிகளிலும் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.