வேட்டையனை பார்த்து பதுங்கிய 'கங்குவா'.! புது ரிலீஸ் தேதி தெரியுமா?

சூர்யாவின் பெரிதும் எதிர்பார்க்கப்படும் "கங்குவா" திரைப்படத்தின் வெளியீட்டு தேதியை  ஸ்டுடியோ கிரீன் அறிவித்துள்ளது.

Kanguva From Nov14

சென்னை :நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘கங்குவா’ திரைப்படம் நவ. 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘கங்குவா’ திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் குறித்த முக்கிய அறிவிப்பு இன்று காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு நேற்று அறிவித்தது.

அதன்படி, புதிய வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. முதலில் அக்.10 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் ரஜினியின் வேட்டையன் வெளியாவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

சூர்யாவின் கேரியரில் அதிக பொருட்செலவில் உருவான படம் என்பதால், பாக்ஸ் ஆபிஸுக்கு முக்கியத்துவம் கொடுத்து படத்தை நவம்பர் 14ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

unknown node

‘கங்குவா’ படத்தில் சூர்யா இரட்டை கெட்டப்பில் நடிக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது, சூர்யா தனது பகுதிகளுக்கு டப்பிங்கை முடித்துள்ளார்.

வேட்டையனை பார்த்து பதுங்கிய 'கங்குவா'.! புது ரிலீஸ் தேதி தெரியுமா?