என்றும் இளமை மாறாத அண்ணனுக்கு ஹேப்பி நியூ இயர்.! உலகநாயகனின் குறும்பு வாழ்த்து.!

டிவிட்டரில் வீடியோ மூலம் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த இளையராஜாவுக்கு கமல்ஹாசன் தனது புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலமே தெரிவித்துள்ளார்.
1982ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடித்து வெளியான திரைப்படம் சகலகலா வல்லவன். இந்த திரைப்படத்தில் இசைஞானி இளையராஜா இசையில் எஸ்.பி.பி குரலில் வெளியான திரைப்பட பாடல் ‘ஹலோ எவரிபடி விஷ் யூ ஏ ஹாப்பி நியூ இயர்’ என தொடங்கும். தற்போது வரையில் இந்த பாடலை போட்டுத்தான் தமிழகத்தில் அநேக இடங்களில் கொண்டாட்டம் களைகட்ட ஆரம்பிக்கிறது.
இந்த பாடலை பாடி இசைஞானி இளையராஜா தனது இளமையான துள்ளலான புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டரில் வீடியோ மூலம் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பலரும் என்றும் இளமை மாறாத இசைஞானிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் உலகநாயகன் கமல்ஹாசன் தனது அண்ணனுக்கு புத்தாண்டு வாழ்த்தை டிவிட்டர் மூலம் தெரிவித்துள்ளார். அதில், ‘ இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year. ‘ என பதிவிட்டுள்ளார்.
இளையராஜா அவர்களை 3 நாட்களுக்கு முன்புதான் சந்தித்தேன்.இளமை மாறாத ராஜாவாக குதூகலமாக பேசிக்கொண்டிருந்தார்.அதையும் விட இளமை கூடியவராய் இன்று இணையதளத்தில் இளமை இதோ இதோ என்று பாடியதைப் பார்த்தேன். மனதளவில் என்றும் இளமை மாறாதிருக்கும் அண்ணனுக்கு Happy New year. https://t.co/Wcqnz7hMPc
— Kamal Haasan (@ikamalhaasan) December 31, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025
எங்கள் தலைவரை போல பேண்ட் சட்டை அணிந்து கொண்டு நடிக்கிறீர்கள்…முதல்வரை சாடிய ஆதவ் அர்ஜுனா !
February 26, 2025
உங்கள் குழந்தைகளுக்கு மட்டும் மூன்றுமொழி …வாட் ப்ரோ? விஜய் ஸ்டைலில் பதிலடி கொடுத்த அண்ணாமலை!
February 26, 2025