காதலர் தினத்தில் வெளியாகிறது 'காத்து வாக்குல ரெண்டு காதல்' பர்ஸ்ட் சிங்கிள்.!

Kaathu vaakula Rendu Kaadhal's first single 'Rendu Kaadhal' has been announced for release on Valentine's Day.

காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ரெண்டு காதல்’பாடலை காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விக்னேஷ் சிவனின் ‘நானும் ரௌடி தான்’ படத்தின் வெற்றிக்கு பின் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா கூட்டணியில் உருவாகும் திரைப்படம் காத்து வாக்குல ரெண்டு காதல்.விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நயன்தாராவுடன் சமந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் . அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை லலித் குமார் மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து தயாரிக்கின்றனர் .

கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில் இன்று கடவுளின் அருளால் படத்தின் செக்கன்ட் ஷெட்யூல் முடிவடைந்து விட்டதாகவும், காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் அறிவித்திருந்தார் .அதன்படி தற்போது அந்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான ‘ரெண்டு காதல்’ பாடலை வரும் காதலர் தினத்தன்று வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

unknown node