ஹோட்டலில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு சீண்டல்.. ஒடியன் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு.!

ஹோட்டலில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக ஒடியன் திரைப்பட இயக்குனர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Odiyan director Shrikumar Menon

கொச்சி :ஹேமா கமிட்டி விவகாரம், மலையாள சினிமா மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவிலும் புயலை கிளப்பியுள்ளது. அறிக்கை வெளியானதில் இருந்து, தைரியமாக நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல், தொந்தரவு பற்றி வெளிப்படையாக பேசி வருகிறார்கள். இது தொடர்பாக தமிழ் நடிகைகளும் இப்போது பேச ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், கோட்டயத்தைச் சேர்ந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மீது மருது காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விளம்பரத்தில் வாய்ப்பு தருவதாக வாக்குறுதி அளித்து மேனன் தன்னை ஹோட்டலுக்கு அழைத்ததாகவும், பின்னர் தன்னை பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் தெரிவித்தார்.

அந்த பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தற்போது உத்தரகாண்டில் புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இதனால், கடந்த வாரம் அங்கிருந்து இ-மெயில் மூலம் மூலம் புகார் அளித்தார். அதனை பெற்று கொண்ட மருது போலீஸார், புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு அடுத்தகட்ட விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது

இயக்குனர் ஸ்ரீகுமார் மேனன் மலையாளத்தில் மாபெரும் வெற்றி பெற்ற ஒடியன் படத்தை இயக்கியவர். இதற்கிடையில், நடிகர் பாபுராஜ் மீது அந்த ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஏற்கனேவே புகார் அளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹோட்டலில் ஜூனியர் ஆர்ட்டிஸ்டுக்கு சீண்டல்.. ஒடியன் பட இயக்குனர் மீது வழக்கு பதிவு.!