குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களை இயக்கிய ராஜூ முருகன் அடுத்து நடிகர் ஜீவாவை வைத்து ஜிப்ஸி எனும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படம் ஷூட்டிங் முழுவதும் முடிவடைந்து விட்டது. ரிலிற்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். இதனை தொடர்ந்து, படத்தின் முதல் பாடலுக்கான டீசர் வெளியிடப்பட்டு தமிழ்நாட்டில் நடக்கும் பிரச்சனைகளை பற்றி கூறப்பட்டிருந்தது.
தற்போது இந்த வெரி வெரி பேட் என தொடங்கும் முதல் பாடல் தற்போது ரிலீஸாகியுள்ளது. இதில் காவல் துறையை பார்த்து கேள்வி கேட்பது போல வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் தற்போது வைரலாக பரவி வருகிறது.
DINASUVADU
unknown node