ஜெய்யுடன் பிரேக்கப் அஞ்சலி ஓபன் டாக்..!

நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் இருவரும் காதலித்து வருவதாக இதற்கு முன்பு இருந்தே தகவல் பரவியது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல்

நடிகை அஞ்சலி மற்றும் நடிகர் ஜெய் இருவரும் காதலித்து வருவதாக இதற்கு முன்பு இருந்தே தகவல் பரவியது. இதன் பின்னர் அவர்கள் இருவரும் பிரிந்துவிட்டதாக ஒரு தகவல் கூறப்பட்டது.

ஆனால் இந்த ஜோடி பற்றி நீண்டகாலமாக வரும் செய்தி பற்றி நேரடியாக அஞ்சலியிடம் கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசியுள்ள அஞ்சலி, இது பற்றி நான் எங்குமே பேசியதே இல்லையே.இது குறித்து அவர்களாக எழுதுகிறார்கள். அதன் பின் அவர்களே நிறுத்திவிட்டார்கள் என  கூறிய நிலையிலும் அஞ்சலி காதல் இல்லை என உறுதியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.