அனிருத் மூலமாக தான் தளபதி 65 வாய்ப்பு கிடைத்தது – நெல்சன் ஓபன் டாக்..!!

Director Nelson Dilip Kumar has said that Anirudh is the reason for directing thalapathy 65.

தளபதி 65 படத்தை இயக்க அனிருத் தான் காரணம் என்று இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகவுள்ள தனது 65 வது படத்தில் நடிக்கவுள்ளார். சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் தளபதி 65 படத்தை இயக்க வாய்ப்பு எப்படி கிடைத்து என்பதை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கோலமாவு கோகிலா திரைப்படம் பண்ணும் பொழுது அனிருத் இசையமைத்து கொடுத்தார். அனிருத் மூலமாகதான் எனக்கு விஜய் சாரின் 65 வது படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது என்று கூறியுள்ளார்.

தளபதி படத்திற்கான படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை தொடர்ந்து விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.