சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த இசைவாணி.! நேரில் அழைத்து வாழ்த்திய இசைஞானி இளையராஜா.!

Musician Ilayaraja has congratulated the Gana singer Isaivani who is on the list of the best women in the world.

உலகின் சிறந்த பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த கானா பாடகியான இசைவாணியை இசைஞானி இளையராஜா நேரில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அறிவாற்றல், படைப்பாற்றல்,தலைமைத்துவம் , அடையாளம் ஆகிய பிரிவுகளின் கீழ் சமுதாயத்திற்கு மகத்தான பங்களிப்பை வழங்கும் பெண்களை கௌரவிக்கும் விதமாக பிரபல ஊடகமான பிபிசி உலகின் சிறந்த பெண்கள் பட்டியலை வெளியிடுவது வழக்கம்.அந்த வகையில் இந்தாண்டு சிறந்த பெண்களுக்கான பட்டியலை பிபிசி வெளியிட்டது .

அந்த வகையில் பிபிசி வெளியிட்ட உலகின் சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம்பெற்ற 100 பெண்களில் 4 பேர் இந்திய பெண்கள் .அதில் இயக்குனர் பா.ரஞ்சித்தின் ‘தி கேஸ்ட்லெஸ் கலெக்ட்டிவ்’ குழுவை சேர்ந்த கானா பாடகியான இசைவாணி என்ற தமிழக பெண்ணும் இடம் பிடித்திருந்தார் . அவருக்கு திரையுலகில் உள்ள பல பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் இசைஞானி இளையராஜா சிறந்த பெண்களுக்கான பட்டியலில் இடம் பிடித்த இசைவாணியை நேரில் அழைத்து வாழ்த்துக்களையும் , பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார் .அந்த புகைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் வெளியிட்டுள்ளது.

unknown node