சந்தானம் அவர்களின் பிஸ்கோத் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
ஆர். கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்து வரும் பிஸ்கோத். இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக தாரா அலிஷா மற்றும் சுவாதி முப்பலா நடித்துள்ளனர். மேலும் சௌகார், ஜானகி, ஆனந்தராஜ், மொட்ட ராஜேந்திரன், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர், லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை மசாலா பிக்ஸ் மற்றும் எம். கே. ஆர். பி. புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரிக்கிறது. இந்த படத்தில் சந்தானம் மூன்று கெட்டப்களில் நடிப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. மூன்று வித காலகட்டத்தில் மூன்று வித கெட்டப்களில் உள்ள சந்தானத்தின் பிஸ்கோத் படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown node

