சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா ரஷ்மிகா .?

It has been reported that Rashmika Mandana will play Surya in 'Surya40' directed by Pandiyaraj.

பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும்’சூர்யா40’படத்தில் ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகை சூர்யா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சமீபத்தில் ஓடிடியில் வெளியான சூரரை போற்று திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது .அதனை தொடர்ந்து சூர்யா வெற்றிமாறனுடன் வாடிவாசல் மற்றும் பாண்டியராஜன் இயக்கத்தில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார்.மேலும் கௌதம் மேனன் இயக்கும் வெப் தொடரிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா40’ படத்தில் நடிக்கவிருக்கும் ஹீரோயின் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.அதாவது சூர்யாவுக்கு ஜோடியாக ரஷ்மிகா மந்தானா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .இந்த தகவல் உண்மையெனில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .ரஷ்மிகா தற்போது நடிகர் கார்த்தியுடன் சுல்தான் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது

சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்கிறாரா ரஷ்மிகா .?