தோழியுடன் கியூட்டான நடனமாடும் நஸ்ரியா.! வைரல் வீடியோ உள்ளே.!

The video of Nazriya dancing cute with her friend is going very viral on social websites.

தோழியுடன் நஸ்ரியா கியூட்டான நடனமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் பல திரைப்படங்களில் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நஸ்ரியா.அதன் பின் நேரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் ராஜா ராணி,வாயை மூடி பேசவும், திருமணம் என்னும் நிக்கா , நையாண்டி , உள்ளிட்ட சில தமிழ் படங்களிலும் ,பல மலையாள படங்களிலும் நடித்துள்ளார்.

அதனையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மலையாளத்தில் பிரபல நடிகராக திகழும் பகத் பாசிலை திருமணம் செய்து கொண்டார் . அதன் பின்னர் பல படங்களை தயாரித்த இவர் கடைசியாக கணவருடன் இணைந்து ட்ரான்ஸ் எனும் படத்தில் நடித்திருந்தார்.தற்பேது நானி நடிக்கும் “Ante Sundhariniki” என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

வழக்கமாக தனது கணவனுடனும் , நண்பர்களுடனும் இணைந்துள்ள அழகான புகைப்படத்தை பகிர்ந்து வரும் இவர் தற்போது தோழியுடன் இணைந்து நடனமாடிய கியூட்டான வீடியோவை வெளியிட்டு எப்போதும் 90ஸ் கிட்ஸ் என்ற கேப்ஷனையும் குறிப்பிட்டுள்ளார்.தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

unknown node