இந்தியன்-2 போஸ்டருடன் பொங்கல் வாழ்த்து தெரிவித்த இந்திய சினிமாவின் பிரமாண்டம்!!

Default Image

இந்திய சினிமாவின் பிரமாண்டம் என சொல்லும் அளவிற்கு தனது படத்தின் ஒவ்வொரு காட்சியையும் பிரமாண்டமாகவும், அதனுள் சமூக கருத்தையும் பதிய வைப்பவர் இயக்குனர் ஷங்கர்.

இவரது இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் நடித்து வெளியாகி மாபெரும் வெற்றியை தந்த திரைப்படம் இந்தியன். இந்த திரைப்படத்தில் சுகன்யா, மனிஷா கொய்ரா ஆகியோர் நடித்திருந்தனர்.

2.O படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தினை எடுக்க தயாராகி விட்டார்.  இந்த படத்தை லைகா நிறுவனம் தயாராக உள்ளது. அனிருத் இசையமைக்க உள்ளார். ரவிவர்மன் ஒளிபதிவு செய்ய உள்ளார். காஜல் அகர்வால் ஹீரோயினாக நடிக்க உள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் முதல் போஸ்டர் இன்று பொங்கலை முன்னிட்டு வெளியாகி உள்ளது. இதன் ஷூட்டிங் ஜனவரி 18ஆம் தேதி தொடங்கவுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்