பந்தயத்தில் இணைந்த 'இந்தியன் 2' திரைப்படம்.! படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Indian 2: நடிகர் கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

Indian2

Indian 2: நடிகர்கமல்ஹாசன் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம், வருகிற ஜூன் மாதம் வெளியாகும் என பட நிறுவனம் அறிவித்துள்ளது.

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி வரும் “இந்தியன் -2” திரைப்படம் ஜூன் 13 அல்லது 14 ஆகிய தேதிகளில் வெளியாகலாம் என்று தகவல் வெளியானது.

unknown node

Indian 2 [File Image]தற்போது, படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜூன் மாதத்தில் சில பெரிய திரைப்படங்கள் வெளியாகிறது. அதன்படி, தங்கலான், வேட்டையன், விடுதலை 2, சீயான் 62 மற்றும் சர்தார் 2  உள்ளிட்ட படங்கள் ஜூன் மாதங்களில் வெளியாகிறது. இப்பொழுது, இந்தியன் 2 திரைப்படமும் அந்த பந்தயத்தில் இணைந்துள்ளது.

இந்தியன் 2

1996 ஆம் ஆண்டு வெளியான இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம்த்தில் ஊழலுக்கு எதிராக போராடும் சேனாபதியாக கமல்ஹாசன் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் காஜல் அகர்வால், எஸ்ஜே சூர்யா, சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், ரகுல் ப்ரீத் சிங், பாபி சிம்ஹா, நெடுமுடி வேணு, விவேக், காளிதாஸ் ஜெயராம், குல்ஷன் குரோவர், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.