கண் பார்வை இழந்த இளைஞருக்கு வாய்ப்பு கொடுத்த இமான்...!

தற்போது உள்ள சமூக வலைதளங்கள் மூலம் பல திறமையானவர்கள் வெளியே வருகின்றனர். டிக் டாக் மூலம் சிலர் திரைப்படங்களில் நடிக்கவும் , திரைப்பட பாடல்கள் பாடவும் வாய்ப்பு

தற்போது உள்ள சமூக வலைதளங்கள் மூலம் பல திறமையானவர்கள் வெளியே வருகின்றனர். டிக் டாக் மூலம் சிலர் திரைப்படங்களில் நடிக்கவும் , திரைப்பட பாடல்கள் பாடவும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில் மேற்கு வங்காள மாநிலத்தின் நாடியாவில் உள்ள ரயில் நிலையத்தில் பிச்சை எடுத்துக் கொண்டிருந்த ராணு மண்டல்  தற்போது அவர் பாலிவுட்டில் பாடகர் ஆகியுள்ளார்.

தற்போது தமிழகத்திலும் ஒரு பாடகரை சமூகம் சமூகவலை தளம் மூலமாக கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. கண் பார்வை இழந்த திருமூர்த்தி என்பவர் அஜித் நடித்த விசுவாசம் படத்தில் இடம்பெற்ற “கண்ணான கண்ணே”என்ற பாடலை பாடும் வீடியோவை ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்து இசையமைப்பாளர் இமான் மற்றும் பாடகர் சித் ஸ்ரீராமுக்கு  டேக் செய்து  ட்விட் செய்தார்.

unknown node

அந்த வீடியோவை பார்த்த இமான் அவரின் முழு விவரம் வேண்டும் என கேட்டுள்ளார். பின்னர் சில மணி நேரங்களில் திருமூர்த்தி தகவல் கொடுத்ததற்கு நன்றி எனத் தெரிவித்து திருமூர்த்தியை பாடு வைப்பதாகவும் கூறியுள்ளார். மேலும் பாடகர் சித் ஸ்ரீராம் திருமூர்த்தி குரல் சிறப்பாக உள்ளது என பாராட்டியுள்ளார்.