மனஉளைச்சலுக்கு மருந்தாக திருமணம் செய்து கொள்ள போகிறேன்! சர்ச்சை நடிகை அதிரடி!

நடிகை மீராமீதுன்  பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை

நடிகை மீராமீதுன்  பிரபலமான இந்திய நடிகையும், மாடல் அழகியுமாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, தானா சேர்ந்த கூட்டம், போதை ஏறி புத்தி மாறி போன்ற படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியேற்றப்பட்டார்.இந்நிலையில், நடிகை மீரா மிதுன் திருமணம் செய்து கொள்ள போவதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், தனக்கு ஏற்படும் மன உளைச்சல்களுக்கு மருந்தாக திருமணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். தனது முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததாகவும், தன்னுடைய அடுத்த திருமணம் தன்னை நன்கு புரிந்துகொண்ட நீண்டகால நண்பருடன் தான் என்றும் தெரிவித்துள்ளார்.