காதலரை பிரிந்த இலியானாவின் தத்துவ பேச்சு! வாழ்க்கையில் யார் பிரிந்தாலும் உங்களை நீங்கள் இழந்துவிடாதீர்கள்!

நடிகை இலியானா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆண்ட்ரூ நீபோன் என்பவரை காதலித்து வந்தார்.
இவர்களது காதலை இவர்கள் வெளிப்படையாக கூறவில்லை என்றாலும், இருவரும் ஒன்றாக சுற்றிய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும் இருவரும் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், இவர்கள் இருவரும் தங்களது இன்ஸ்டா பக்கத்தில் உள்ள பதிவுகளை நீக்கியுள்ள நிலையில், இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து, இலியானா தனது சமூகவலைதளப்பக்கத்தில்,ஒரு பதிவினை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், வாழ்க்கையில் நீங்கள் நண்பர்களை, குடும்பத்தினரை, பார்ட்னரை இழக்கலாம். உங்கள் வாழ்க்கையில் யார் பிரிந்தாலும் உங்களை நீங்கள் இழந்துவிடாதீர்கள்.
உங்கள் மீது அன்பு செலுத்துவது எப்படி என்பதை கற்றுக் கொள்ள வேண்டியது முக்கியம். உங்களை சுற்றியுள்ளவர்களால் நீங்கள் நேசிக்கப்படாதவராக உணரும்போது உங்களுக்கு நீங்களே அன்பு செலுத்துங்கள் என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
நெல்லையில் பரபரப்பு: நாங்குநேரி மாணவன் சின்னத்துரை மீது மீண்டும் தாக்குதல் நடத்திய கும்பல்.!
April 16, 2025
மாஸ்காட்டிய அபிஷேக்-ராகுல்.., பவுலிங்கில் மிரட்டிய ஆர்ச்சர்.. ராஜஸ்தானுக்கு இது தான் இலக்கு.!
April 16, 2025
“அஜித் ரசிகனா இல்லனா, வாழ்க்கைல நான் என்னவாகி இருப்பேன்னு தெரியல” – இயக்குநர் ஆதிக்.!
April 16, 2025
தொடர்ந்து பேட்டை சோதனை செய்யும் அம்பயர்கள்! காரணம் என்ன?
April 16, 2025