நானே வருவேன் அதிர்ச்சி அப்டேட்.! மீண்டும் அதே கதையா.?! சோகத்தில் ரசிகர்கள்....

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள

தனுஷ் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நானே வருவேன் திரைப்படம் வரும் செப்டம்பர் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் காத்துள்ள நிலையில், படத்தின் டிக்கெட்கான முன்பதிவு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.

unknown node

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு இவர்களது கூட்டணி இணைந்துள்ளதால், படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது.

unknown node

ஏற்கனவே படத்திலிருந்து வெளியான டீசர், மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், விரைவில் படத்தின் அடுத்த பாடல் வெளியாகலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இதையும் படியுங்களேன் –அந்த படம் முழுவதும் நின்னிட்டே இருந்தேன்…ஷகீலா பகிர்ந்த சோக கதை.!

unknown node

பொதுவாக ஒரு படம் வெளிநாடுகளில் சென்சார் சான்றிதழ் வாங்கும்பொழுது அதற்கு கொடுக்கப்பட்ட கதையை அவர்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் நானே வருவேன் படத்தின் கதை தற்போது வெளியாகியிருக்கிறது. அதன் படி, ” பேய் பிடித்திருக்கும் மகளை காப்பாற்றும் தந்தையின் கதைதான் நானே வருவேன்”. இதற்கு முன் செல்வராகவன் இயக்கிய நெஞ்சம் மறப்பதில்லை படமும் பேய்ப் படமாகவே அமைந்திருந்தது எனவே தனுஷ் ரசிகர்கள் சற்று சோகத்தில் இருக்கிறார்கள்.

நானே வருவேன் அதிர்ச்சி அப்டேட்.! மீண்டும் அதே கதையா.?! சோகத்தில் ரசிகர்கள்....